திருப்பூர் அணிக்கு எதிரான போட்டியில் சேலம் அணி 169 ரன்கள் எடுத்துள்ளது.
10-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டியின் 2வது கட்டம் சென்னையின் சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து வருகிறது.
திருப்பூர் தமிழன்ஸ்
இன்று மாலை 3.30 மணிக்கு நடைபெற்ற 28-வது லீக் ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ், சேலம் ஸ்பர்டன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சேலம் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, சேலம் ஸ்பர்டன்ஸ் அணி முதலில் களமிறங்கியது. தொடக்கத்தில் அபிஷேக், பூபதிகுமார் ஜோடி அதிரடியாக ஆடியது.
முதல் விக்கெட்டுக்கு 47 ரன் சேர்த்த நிலையில் பூபதிகுமார் 27 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய விவேக் 6 ரன்னில் வெளியேறினார்.
அபிஷேக் 29 ரன்னில் ஆட்டமிழந்தார். சன்னி சந்து 1 ரன்னிலும், ஹரிஷ்குமார் 3 ரன்னில் அவுட்டாகினர்.
பொறுப்புடன் ஆடிய கார்த்திக் மணிகண்டன் அரை சதமடித்தார். அவர் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இறுதியில், சேலம் ஸ்பர்டன்ஸ் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 169 ரன்கள் எடுத்துள்ளது.
திருப்பூர் அணி சார்பில் மதிவண்ணன் 3 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருப்பூர் அணி களமிறங்குகிறது.