கிரிக்கெட்

டி20 கிரிக்கெட்டில் 5000 ரன்: விராட் கோலியை முந்திய திலக் வர்மா

இந்திய வீரர் திலக் வர்மா அதிரடியாக விளையாடி 44 ரன்கள் குவித்தார்.

டி20 கிரிக்கெட்டில் 5000 ரன்கள் குவித்த திலக் வர்மா, விராட் கோலி சாதனையை முறியடித்துள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

கேப்டன் ஷாய் ஹோப் அதிரடியாக ஆடி அணிக்கு வெற்றியைத் தேடி வந்தார்

இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் இந்திய வீரர் திலக் வர்மா அதிரடியாக விளையாடி 18 பந்தில் 44 ரன்கள் குவித்தார்.

இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் குறைவான இன்னிங்ஸ்களில் 5,000 ரன்களை கடந்த வீரர்களின் பட்டியலில் விராட் கோலியை திலக் வர்மா முந்தினார்.

திலக் வர்மா 166 இன்னிங்ஸ்களில் இந்த மைல்கல்லை எட்டினார். விராட் கோலி 167 இன்னிங்ஸ்களில் இதனை எட்டியிருந்தார்.

இந்தப் பட்டியலில் கே.எல்.ராகுல் 143 இன்னிங்ஸ்களுடன் முதலிடத்திலும், ருதுராஜ் கெய்க்வாட் 145 இன்னிங்ஸ்களுடன் இரண்டாவது இடத்திலும், சுப்மன் கில் 154 இன்னிங்ஸ்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர். அபிஷேக் சர்மா 165 இன்னிங்ஸ்களுடன் அடுத்த இடத்தில் உள்ளார்

SCROLL FOR NEXT