சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரே ஆண்டில் அதிக கேட்ச் பிடித்த வீரர் என்ற உலக சாதனையை இந்தியாவின் திலக் வர்மா படைத்துள்ளார்.
நியூசிலாந்தில் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.
கிறிஸ்ட்சர்ச்சில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
உலக சாதனை
இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டி20 போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய நியூசிலாந்து 5 விக்கெட்டுக்கு 180 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய இந்திய அணி 19.5 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 181 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்று, 2-0 என முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், இந்தப் போட்டியில் டிம் செய்பர்ட், டேரில் மிட்செல் ஆகியோரின் கேட்ச்களை திலக் வர்மா பிடித்தார். நடப்பு ஆண்டில் அவர் பிடித்த கேட்ச்களின் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்தது.
இதன்மூலம், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரே காலண்டர் ஆண்டில் அதிக கேட்ச் பிடித்த வீரர் என்ற உலக சாதனையை திலக் வர்மா படைத்துள்ளார்.
இதற்குமுன் இந்தோனேசியாவின் டேனில்சன் ஹவோ 2025-ம் ஆண்டில் 25 கேட்ச்களைப் பிடித்தது சாதனையாக இருந்ததை திலக் வர்மா முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.