கிரிக்கெட்

என் மகனை பார்த்து பேச கூட முடியாமல் நான் கொண்டாடும் தந்தையர் தினம் இது: தவான்

ஷிகர் தவான் ஆஷா முகர்ஜியை கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றுள்ளனர்.

மாலை மலர்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி தொடக்க வீரர்களில் ஒருவர் ஷிகர் தவான். இவர் ஏற்கனவே திருமணமான ஆஸ்திரேலிய குத்துச்சண்டை வீராங்கனை ஆஷா முகர்ஜியை கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கிறது.

இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றுள்ளனர். ஆஷா முகர்ஜியும் அவரது மகனோடு ஆஸ்திரேலியாவில் வசித்து வருகிறார். அதனால் தனது மகனை பார்க்க முடியாமல் தவான் தவித்து வருகிறார்.

இன்று சர்வதேச தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி தவான் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் தனது அப்பா மற்றும் மகனுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

அதில், "என்னுடைய அப்பாவுக்கு தந்தையர் தின வாழ்த்துக்கள். என்னுடைய மகன் என்னுடன் இல்லாமல் நான் கொண்டாடும் தந்தையர் தினம் என்பதால் இது எனக்கு ரொம்ப எமோஷனலாக உள்ளது. என்னால் என் மகனுடன் பேச கூட முடியவில்லை. அனைத்து அப்பாக்களுக்கு தந்தையர் தின வாழ்த்துக்கள். எல்லாருக்கும் அன்பை பகிர்வோம்" என்று பதிவிட்டுள்ளார்.