கிரிக்கெட்

MI | VIDEO: புதிய ஓபனர்... மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்களுடன் தி கிரேட் காளி

டபிள்யூ.டபிள்யூ.இ ஜாம்பவான் தி கிரேட் காளி மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரர்களைச் சந்தித்தார்.

ஐபிஎல் தொடரின் 19-வது சீசன் நாளை மறுநாள் தொடங்குகிறது. இந்த தொடருக்காக 10 அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர். மேலும் ஒவ்வொரு அணியும் போட்டோஷூட் மற்றும் விளம்பரப் படப்பிடிப்பில் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் டபிள்யூ.டபிள்யூ.இ (WWE) ஜாம்பவான் தி கிரேட் காளி அந்த அணியின் நட்சத்திர வீரர்களைச் சந்தித்தார்

அந்த சந்திப்பில் மும்பை இந்தியன்ஸ் வீரர்களான ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா மற்றும் தென் ஆப்பிரிக்க வீரர் ரையான் ரிக்கெல்டன் ஆகியோருடன் போட்டோஷூட் மற்றும் விளம்பரப் படப்பிடிப்பில் காளி கலந்து கொண்டு ஜாலியாக பேசி மகிழ்ந்தார்.

இது தொடர்பான வீடியோவை தி கிரேட் காலி தனது சமூக வலைதளங்களில் பகிர்ந்து அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள், மும்பை இந்தியன்ஸின் புதிய ஓப்பனர் என்று கிண்டலாகப் பதிவிட்டு வருகின்றனர்.

மும்பை இந்தியன்ஸ் அணி தனது முதல் போட்டியில் மார்ச் 29-ம் தேதி வான்கடே மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.