மோஷின் நக்வி, அமோல் முஜும்தார் 
கிரிக்கெட்

மோஷின் நக்வியிடம் கோப்பையை வாங்க கூடாது என்பது பிசிசிஐ-யின் நிலைப்பாடு - பயிற்சியாளர் அமோல் முஜும்தார்

இந்தியாவின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 20 ஓவர்களில் 111 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

2026 மகளிர் ஆசியக் கோப்பையை வென்ற மகளிர் அணி மோஷின் நக்வியிடம் கோப்பையை வாங்க மறுத்தன் பின்னணி

துபாயில் நடைபெற்ற 2026 மகளிர் ஆசியக் கோப்பை டி20 இறுதிப்போட்டியில் இலங்கை அணியை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி 8வது முறையாக கோப்பையை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது.

இருப்பினும், போட்டியின் முடிவில் ஆசியக் கிரிக்கெட் கவுன்சிலின் தலைவரும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவருமான மோஷின் நக்வியிடமிருந்து கோப்பையைப் பெற இந்திய அணி மறுத்துவிட்டது.

போட்டி

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களான ஷெபாலி வர்மா (68) மற்றும் ஸ்மிருதி மந்தனா (59) இணைந்து 129 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்தனர்.

இறுதியில் 184 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இலங்கை அணி, இந்தியாவின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 20 ஓவர்களில் 111 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

கோப்பையை வாங்க மறுப்பு

போட்டி முடிந்த பிறகு நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் நக்வியிடமிருந்து கோப்பையைப் பெற முடியாது என்பதில் இந்திய அணி உறுதியாக இருந்தன.

ஏசிசி துணைத் தலைவர் காலித் அல் ஜரூனி மூலம் கோப்பையை இந்திய அணிக்கு வழங்கலாம், வெற்றி பெற்ற நாட்டின் கிரிக்கெட் வாரியப் பிரதிநிதி கோப்பையை வழங்கலாம் என இந்திய அணி தரப்பு தெரிவித்தது.

ஆனால், இந்த இரண்டு கோரிக்கைகளையும் நக்வி நிராகரித்து, தான் தான் கோப்பையை வழங்குவேன் என அடம்பிடித்தார்.

இதன் காரணமாக, இந்திய அணி கோப்பையையோ அல்லது வெற்றிப் பதக்கங்களையோ பெறாமல் விழாவைப் புறக்கணித்தது.

பயிற்சியாளர் சொன்னது என்ன?

செய்தியாளர் சந்திப்பில் பேசிய இந்திய மகளிர் அணியின் தலைமைப் பயிற்சியாளர் அமோல் முஜும்தார்

"இது பிசிசிஐ எடுத்த கொள்கை முடிவு; நாங்கள் எங்கள் வாரியத்தின் முடிவிற்குத் துணை நிற்கிறோம்.

எங்களைப் பொறுத்தவரை இந்தத் தொடர் முடிந்துவிட்டது. மைதானத்தின் பெரிய திரையிலேயே 'இந்தியா ஆசியக் கோப்பை 2026 சாம்பியன்' என அறிவிக்கப்பட்டுவிட்டது.

நாங்கள் சாம்பியன் பட்டம் வென்றதில் மகிழ்ச்சி அடைகிறோம். அடுத்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளை எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம்." என தெரிவித்தார்.

2025 ஆண்கள் ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியிலும் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான கசப்பால் நக்வியிடம் இந்திய அணி கோப்பையை வாங்க மறுத்தது குறிப்பிடத்தக்கது.

மோஷின் நக்வி யார்?

மோஷின் சின் நக்வி தற்போது பாகிஸ்தான் நாட்டின் உள்நாட்டமைச்சர் ஆகவும் செயல்பட்டு வருகிறார்.

ஒரு நாட்டின் உள்நாட்டமைச்சராக இருக்கும் நபர், சர்வதேச ஆசியக் கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராகவும் முரண்பாடுகளை உருவாக்குகிறது என்ற விமர்சனம் உள்ளது.

2025 சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தானில் நடைபெற்றபோது, பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி அங்கு செல்ல மறுத்தது. அப்போது இந்தியாவிற்கு எதிராகக் கடுமையான கருத்துகளை நக்வி தெரிவித்திருந்தார்.

"போர் தான் உங்களுடைய பெருமையின் அளவுகோல் என்றால், வரலாறு ஏற்கனவே பாகிஸ்தானின் கைகளில் உங்களுக்கு ஏற்பட்ட அவமானகரமான தோல்விகளைப் பதிவு செய்துள்ளது" என 1999 இல் கார்கில் போரில் இந்தியாவை பாகிஸ்தான் வென்றதுபோல சித்தரித்து நக்வி பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT