ஐ.சி.சி. வெளியிட்டுள்ள டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் ரிஷப் பண்ட் டாப் 10 பட்டியலுக்குள் நுழைந்துள்ளார்.
ஐசிசி சார்பில் சிறந்த வீரர், வீராங்கனைகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், டெஸ்ட் போட்டியின் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப் பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டது.
இதில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்டரான ரிஷப் பண்ட் 6 இடங்கள் முன்னேறி 7-வது இடம் பிடித்துள்ளார்.
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்றபோது இரண்டாவது இன்னிங்சில் அதிரடியாக அரைசதம் அடித்தார்.
இதேபோல், இரண்டாவது டெஸ்டிலும் அரை சதம் அடித்தது தரவரிசை முன்னேற்றத்திற்கு முக்கிய காரணமாக அமைந்தது. இதன் மூலம் ஒரு வருடத்திற்கு பிறகு மீண்டும் டெஸ்ட் பேட்டர்களின் டாப்-10 பட்டியலுக்குள் திரும்பியுள்ளார்.
ரிஷப் பண்ட்டுடன் இந்திய கேப்டன் சுப்மன் கில்லும் 7வது இடத்தைப் பகிர்ந்துள்ளார். கே.எல்.ராகுல் 5 இடங்கள் முன்னேறி 30-வது இடத்தையும் பிடித்துள்ளார்.
இந்தப் பட்டியலில் இங்கிலாந்தின் ஹாரி புரூக் முதலிடத்திலும், ஜோ ரூட் 2-வது இடத்திலும் உள்ளனர். ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டிராவிஸ் ஹெட் 3 மற்றும் 4-வது இடங்களில் உள்ளனர்.
இந்திய வீரர்களில் ரிஷப் பண்டின் இந்த முன்னேற்றம் குறிப்பிடத்தக்கதாக அமைந்துள்ளது.