தென்ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே, நமீபியா இடையிலான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் சமீபத்தில் முடிவடைந்தது. வருகிற 24-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை ஆஸ்திரேலியா அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.
இதற்கான தென்ஆப்பிரிக்கா ஒருநாள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. டெம்பா பவுமா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதேவேளையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் அதிரடி வீரரான டெவால்ட் ப்ரீவிஸ் அணியில் சேர்க்கப்படவில்லை.
காயம் காரணமாக ரபடா அணியில் சேர்க்கப்படவில்லை. எனினும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு தயாராகி விடுவார்.
பார்ட்மேன், மபாகா, லுங்கி நிகிடி, கார்பின் போஸ்ச், மார்கோ யான்சன் ஆகிய வேகப்பந்து வீச்சாளர்கள் அணியில் இடம் பிடித்துள்ளனர்.
பார்ச்யூன், மகாராஜ் ஆகியோர் சுழற்பந்து வீச்சாளராக சேர்க்கப்பட்டுள்ளனர். குயிண்டன் டி காக்கும் அணியில் உள்ளார்.
டெம்பா பவுமா (கேப்டன்), பார்ட்மேன், கார்பின் போஸ்ச், பிரீட்ஸ்கே, கோயிட்சி, குயிண்டன் டி காக், ஜோர்சி, பார்ச்யூன், மார்கோ யான்சன், மகாராஜ், மபாகா, மார்க்கிராம், டேவிட் மில்லர், லுங்கி நிகிடி, ரிக்கெல்டன், டிரிஸ்டன் ஸ்டப்ஸ்