சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரில் சவுராஷ்டிரா அணியை தமிழ்நாடு அணி 38 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான டி20 தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
இந்தூரில் இன்று நடந்த போட்டியில் தமிழ்நாடு, சவுராஷ்டிரா அணிகள் மோதின. டாஸ் வென்ற சவுராஷ்டிரா அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய தமிழ்நாடு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 192 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் சன்னி சந்து அதிரடியாக ஆடி 17 பந்தில் 6 சிக்சர் உள்பட 44 ரன்கள் குவித்தார். ஆண்ட்ரே சித்தார்த் 38 ரன்னும், பாலசுப்ரமணியன் சச்சின் 37 ரன்னும் எடுத்தனர்.
இதையடுத்து, 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சவுராஷ்டிர அணி 16.4 ஓவரில் 154 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். இதனால் 92 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து திணறியது.
கடைசி விக்கெட்டுக்கு உனத்கட்-சேட்டன் சகாரியா ஜோடி பொறுப்புடன் ஆடி 62 ரன்கள் சேர்த்த நிலையில், உனத்கட்40 ரன்னில் அவுட்டானார்.
தமிழ்நாடு அணி சார்பில் சன்னி சந்து 4 விக்கெட்டும், சாய் கிஷோர் 3 விக்கெட்டும், குர்ஜப்னீத் சிங் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தமிழக அணி 7 போட்டிகளில் விளையாடி 3ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளதால் அடுத்த சுற்று வாய்ப்பு பறிபோனது.