கிரிக்கெட்

177 இலக்கு: இந்தியாவை மிரட்டிய நிலையில் ஸ்டப்ஸ் 31 ரன்னில் அவுட்

டி காக் 29 ரன்கள் அடித்து களத்தில் உள்ளார்.ஸ்டப்ஸ் 21 பந்தில் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

மாலை மலர்

டி20 உலகக் கோப்பை போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா விராட் கோலி (76), அக்சர் பட்டேல் (47) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 7 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் குவித்தது.

பின்னர் 177 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்காவின் டி காக், ஹென்ரிக்ஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். அர்ஷ்தீப் சிங் வீசிய முதல் ஓவரில் தென்ஆப்பிரிக்கா ஒரு பவுண்டரியுடன் 6 ரன்கள் அடித்தது.

2-வது ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் ஹென்ரிக்ஸ் க்ளீன் போல்டானார். ஹென்ரிக்ஸ் 5 பந்தில் 4 ரன் எடுத்து வெளியேறினார். அடுத்து மார்கிராம் களம் இறங்கினார். இவர் அர்ஷ்தீப் சிங் வீசிய 3-வது ஓவரின் 3வது பந்தில் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்-யிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். மார்கிராம் 5 பந்தில் 4 ரன்கள் எடுத்தார். அடுத்து ஸ்டப்ஸ் களம் இறங்கினார். 3 ஓவர் முடிவில் தென்ஆப்பிரிக்கா 14 ரன்கள் எடுப்பதற்குள் 2 விக்கெட்டுகளை இழந்தது.

4-வது ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரில் டி காக் ஒரு பவுண்டரி அடித்தார். பும்ரா இந்த ஓவரில் 8 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இதனால் தென்ஆப்பிரிக்கா 4 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 22 ரன்கள் எடுத்திருந்தது.

5-வது ஓவரை அக்சர் பட்டேல் வீசினார். இந்த ஓவரில் அக்சர் பட்டேல் இரண்டு பவுண்டரியுடன் 10 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இதனால் தென்ஆப்பிரிக்கா 5 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 32 ரன்கள் எடுத்தது.

6-வது ஓவரை குல்தீப் யாதவ் வீசினார். இந்த ஓவரில் ஒரு பவுண்டரியுடன் 10 ரன்கள் விட்டுக்கொடுக்க தென்ஆப்பிரிக்கா பவர்பிளேயான முதல் 6 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 42 ரன்கள் எடுத்துள்ளது. டி காக் 20 ரன்னும், ஸ்டப்ஸ் 12 ரன்னும் எடுத்திருந்தனர்.

7-வது ஓவரை அக்சார் பட்டேல் வீசினார். இந்த ஓவரில் ஒரு பவுண்டரியுடன் 7 ரன்கள் விட்டுக்கொடுத்தார். 8-வது ஓவரை குல்தீப் யாதவ் வீசினார். இந்த ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸ் உடன் 13 ரன்கள் விட்டுக்கொடுத்தார். தென்ஆப்பிரிக்கா 8 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 62 ரன்கள் எடுத்து.

9-வது ஓவரை அக்சர் பட்டேல் வீசினார். இந்த ஓவரில் ஒரு சிக்ஸ் அடித்த ஸ்டப்ஸ் 5-வது பந்தில் போல்டானார். அவர் 21 பந்தில் 3 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 31 ரன்கள் எடுத்தார். அடுத்து கிளாசன் களம் இறங்கினார்.

தென்ஆப்பிரிக்கா 9 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 71 ரன்கள் எடுத்துள்ளது. டி காக் 22 பந்தில் 29 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார்.