ஷாருக்கான்
கிரிக்கெட்

சையது முஸ்தாக் அலி டிராபி: தமிழ்நாடு 6 ரன்னில் த்ரில் வெற்றி

ஷாருக்கான் ஆட்டமிழக்காமல் 46 ரன்கள் அடிக்க தமிழ்நாடு 172 ரன்கள் சேர்த்தது.

சையது முஸ்தாக் அலி டிராபி டி20-யில் இந்தூரில் நடைபெற்ற போட்டியில் தமிழ்நாடு- ரெயில்வேஸ் அணிகள் மோதின. முதலில் விளையாடி தமிழ்நாடு நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் சேர்த்தது.

ஷாருக்கான் ஆட்டமிழக்காமல் 46 ரன்கள்

அமித் சாத்விக் 38 ரன்களும், பி. சச்சின் 33 ரன்களும், ஷாருக்கான் ஆட்டமிழக்காமல் 46 ரன்களும், ஆர். ராஜ்குமார் 31 ரன்களும் சேர்த்தனர்.

ரெயில்வேஸ் அணிக்கு 173 ரன்கள் இலக்கு

பின்னர் 173 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ரெயில்வேஸ் அணி களம் இறங்கியது. முதல் நான் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்மிழந்தனர். 6-வது வீரரான களம் இறங்கிய ஜுபைர் அலி (46), 8-வது வீரராக களம் இறங்கிய தஃபிக் உத்தின் மோந்தல் (57) சிறப்பாக விளையாட தமிழ்நாடு அணிக்கு நெருக்கடி ஏற்பட்டது.

கடைசி 2 ஓவரில் 14 ரன்கள்

கடைசி 2 ஓவரில் 14 ரன்கள் தேவைப்பட்டன. 19-வது ஓவரை சாய் கிஷோர் வீசினார். இந்த ஓவரில் 3 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார். இதனால் கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவைப்பட்டன. இந்த ஓவரில் குர்ஜப்நீத் சிங் 4 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுக்க ரெயில்வேஸ் அணியால் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது.

6 ரன்களில் த்ரில் வெற்றி

இதனால் தமிழ்நாடு அணி 6 ரன்களில் த்ரில் வெற்றி பெற்றது. அதிசயராஜ் டேவிட்சன் 3 விக்கெட்டும், வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இன்றைய போட்டியில் வெற்றி அணிகள் விவரம்

மற்ற போட்டிகளில் மேகாலயா, மணிப்பூர், சண்டிகர், பஞ்சாப், புதுச்சேரி, மும்பை, ஜார்க்கண்ட், சவுராஷ்டிரா, ஆந்திரா, குஜராத், சர்வீசஸ், ராஜஸ்தான், இமாச்சல பிரதேசம், கர்நாடகா, டெல்லி, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் அணிகள் வெற்றி பெற்றன.

SCROLL FOR NEXT