கிரிக்கெட்

கவுன்ட்டி கிரிக்கெட்: அறிமுக போட்டியின் முதன்நாளில் அசத்திய மானவ் சுதர்

கவுன்ட்டி போட்டியில் அறிமுகமான மானவ் சுதர், முதல் நாளில் 2 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமான மானவ் சுதர், இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 7 விக்கெட்டுகள் வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதை வென்றார்.

இதனைத்தொடர்ந்து இங்கிலாந்தில் நடைபெறும் கவுன்ட்டி சாம்பியன்ஷிப் முதல் டிவிசனில் வார்விக்ஷயர் அணிக்காக விளையாட ஒப்பந்தம் ஆனார். இரண்டு போட்டிகளில் விளையாட முடிவு செய்தார்.

வார்விக்ஷயர் கவுன்ட் சாம்பியன்ஷிப் அணி

யார்க்ஷயர் அணிக்கெதிரான போட்டி இன்று தொடங்கியது. முதலில் வார்விக்ஷயர் அணி பந்து வீசியது. முதல் நாளில் யார்க்ஷயர் 6 விக்கெட் இழப்பிற்கு 398 ரன்கள் குவித்துள்ளது. இதில் மானவ் சுதர் 76 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

முதல் விக்கெட்டாக சாம் ஒயிட்மேனை 55 ரன்களில் வீழ்த்தினார். பின்னர் 261 பந்துகளில் 167 ரன்கள் குவித்தது வில்லியம் லக்ஸ்டனை வீழ்த்தினார்.

வார்விக்ஷயர் அடுத்ததாக சோமர்செட்டை எதிர்கொள்கிறது. இந்த போட்டியிலும் மானவ் சுதர் விளையாட வாய்ப்புள்ளது.

ஜெய்தேவ் உனத்கட்

இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜெய்தேவ் உனத்கட் சசக்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இவர் 29 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் சாய்த்தார். இதனால் கிளாமோர்கன் அணி 155 ரன்களில் சுருண்டது.