கிரிக்கெட்

இங்கிலாந்து, அயர்லாந்து தொடர்: நிதிஷ்குமார் ரெட்டி OUT, சூர்யான்ஷ் ஷெட்கே IN

இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி ஜூலை 1-ம் தேதி தொடங்குகிறது.

இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.

இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி ஜூலை 1-ம் தேதி தொடங்குகிறது.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக, இந்திய அணியின் இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து தொடர்களில் இருந்து விலகியுள்ளார்.

இந்நிலையில், காயம் அடைந்த நிதிஷ்குமார் ரெட்டிக்கு மாற்றாக இந்திய அணியில் சூர்யான்ஷ் ஷெட்கே சேர்க்கப்பட்டுள்ளார்.

மும்பை அணியின் வளர்ந்து வரும் இளம் ஆல்-ரவுண்டரான இவர் அதிரடியான பேட்டிங் மற்றும் வேகப்பந்து வீச்சுக்கு பெயர் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.