கிரிக்கெட்

ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான ஒருநாள் தொடர்: பாண்டியாவுக்கு பதில் சூர்யான்ஷ் ஷெட்கே

ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் அக்டோபர் 6-ம் தேதி தொடங்குகிறது.

காயம் காரணமாக விலகிய ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக சூர்யான்ஷ் ஷெட்கே இந்தியா ஏ அணியில் இணைந்துள்ளார்.

இந்தியா ஏ மற்றும் ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் அக்டோபர் 6-ம் தேதி தொடங்குகிறது.

பாண்டியா விலகல்

ஹர்திக் பாண்டியாவுக்கு வலது காலின் கீழ்ப்பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால், ஆஸ்திரேலியா ஏ அணி மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர் உட்பட குறைந்தது 3 வாரத்துக்கு அவரால் கிரிக்கெட்டில் பங்கேற்க முடியாத சூழல் உருவாகியது.

அணிக்கு திரும்ப வாய்ப்பு இல்லை

ஹர்திக் பாண்டியா மீண்டும் விளையாட தொடங்குவதற்கான தேதி செப்டம்பர் 20 என நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. அதற்கேற்ப, அக்டோபர் 6-ம் தேதி தொடங்கவுள்ள ஆஸ்திரேலியா 'ஏ' அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான 'இந்தியா ஏ' அணியில் அவர் தேர்வு செய்யப்பட்டிருந்தார். அதற்குள் பாண்டியா மீண்டும் அணிக்கு திரும்புவதற்கான வாய்ப்பு இல்லை.

சூர்யான்ஷ் ஷெட்கே

இந்நிலையில், ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியில் பாண்டியாவுக்கு பதிலாக சூர்யான்ஷ் ஷெட்கே இணைந்துள்ளார்.

SCROLL FOR NEXT