இந்திய கிரிக்கெட் அணி
கிரிக்கெட்

ஒயிட்-பால் கிரிக்கெட்டில் இந்தியா வல்லரசாக உருவெடுத்துள்ளது: பிசிசிஐ செயலாளர் புகழாரம்

ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய ஆடவர் மற்றும் பெண்கள் அணி தங்கம் வென்று சாதனைப் படைத்தது.

ஆசிய விளையாட்டு போட்டி ஜப்பானில் நடைபெற்றது. இதில் முன்னணி வீரர்களை கொண்ட இந்திய டி20 அணி களம் இறங்கியது. அதேவேளையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா விரைளயாடியது. இதில் 2-1 எனத் தொடரை கைப்பற்றியது.

ஒயிட்-பால் கிரிக்கெட்டில் இரண்டு வெவ்வேறு அணிகள் சாதனைப் படைத்துள்ளன. இந்த நிலையில் இந்திய அணியில் ஒயிட்-பால் கிரிக்கெட்டில் சூப்பர் பவர் ஆகியுள்ளது என்று பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா தெரிவித்துள்ளார்.

ஒரே நேரத்தில் இரண்டு இந்திய அணிகள்

இது தொடர்பாக தேவஜித் சைகியா கூறியதாவது:-

மிகவும் அருமை. உலக ஒயிட்-பால் கிரிக்கெட்டில் இந்தியா இப்போது ஒரு வல்லரசாக உருவெடுத்துள்ளது. நாங்கள் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற்று வருகிறோம். இந்திய அணி மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் போட்டிகளிலும், ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் ஒரே சமயத்தில் விளையாடியுள்ளது. ஒயிட் பால் கிரிக்கெட்டில் தற்போது நமது மாற்று வீரர்களின் பலம் எவ்வளவு வலுவாக உள்ளது என்பதை இது காட்டுகிறது.

இந்த வெற்றிக்கு அனைத்து வீரர்களுக்கும் முழுப் பெருமையும் சேரும். மேலும் அனைத்து ஸ்டாஃப்களுக்கும் முழுப் பெருமையும் சேரும். இது ஒட்டுமொத்த நாட்டையும் மிகவும் பெருமைப்படுத்தியுள்ளது.

இவ்வாறு சைகியா தெரிவித்தார்.

இந்திய அணிகளின் சாதனை

இந்திய ஆடவர் அணி ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி, டி20 உலக கோப்பை, ஐசிசி U19 உலக கோப்பை, மகளிர் U19 டி20 உலக கோப்பை ஆகியவற்றில் சாதனைப் படைத்துள்ளது. கடந்த ஆண்டு ஐசிசி மகளிர் உலக கோப்பையை இந்திய அணி வென்றது.

ஆசிய விளையாட்டு போட்டிக்கான பைனில் இந்தியா பாகிஸ்தானை எதிர்கொண்டது. இந்தியா 211 ரன்களில் குவித்த நிலையில், பாகிஸ்தான் 192 ரன்கள் எடுத்தது. இதனால் இந்தியா 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தங்கம் வென்றது.

SCROLL FOR NEXT