லண்டன்:
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் நாள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 327 ரன்கள் குவித்தது. டிராவிஸ் ஹெட் சிறப்பாக ஆடி சதமடித்தார். அவருக்கு ஸ்மித் நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். ஆட்ட நேர முடிவில் ஹெட் 146 ர்ன்னுடனும், ஸ்மித் 95 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது சிறிது நேரத்தில் ஸ்டீவன் ஸ்மித் சதமடித்தார். இது அவரது 31வது சதமாகும்.