கிரிக்கெட்

டெஸ்ட் கிரிக்கெட்டில் 11,000 ரன்கள்: சாதனை படைத்த ஸ்டீவ் ஸ்மித்

ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 99 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித் 11,000 ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

இரண்டாவது டெஸ்ட்டில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 425 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

பாலோ ஆன் பெற்ற ஆஸ்திரேலியா

தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 99 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் ஸ்டீவ் ஸ்மித் அதிகபட்சமாக 28 ரன் எடுத்தார்.

பாலோ ஆன் பெற்ற ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸ் ஆடிவருகிறது.

11,000 ரன் கடந்த ஸ்மித்

இந்நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் ஸ்டீவ் ஸ்மித் 11,000 ரன்களை கடந்தது சாதனை படைத்துள்ளார். ஆஸ்திரேலிய வீரர்களில் மூன்றாவது வீரராக இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். ஒட்டுமொத்தமாக 11,000 ரன்களைக் கடந்த 12வது வீரர் ஆவார்.

டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் அடித்த ஆஸ்திரேலிய வீரர்கள்

ரிக்கி பாண்டிங்: 13,378 ரன்கள்

ஆலன் பார்டர்: 11,174 ரன்கள்

ஸ்டீவ் ஸ்மித்: 11,000 ரன்கள்

SCROLL FOR NEXT