டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த ஆஸ்திரேலிய வீரர்கள் பட்டியலில் ஸ்டீவ் வாக்கை முந்தி ஸ்டீவ் ஸ்மித் சாதனை படைத்தார்.
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துள்ள ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் டர்பனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி மதிய உணவு இடைவேளை வரை 26 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 84 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தப் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் 25 ரன்னுடன் விளையாடி வருகிறார்.
இந்நிலையில், ஆஸ்திரேலிய அணிக்காக டெஸ்ட்டில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் ஸ்டீவ் வாக்கை முந்தி மூன்றாவது இடம் பிடித்து அசத்தியுள்ளார்.
ஸ்டீவ் ஸ்மித் 10, 929 ரன்களுடன் மூன்றாமிடத்துக்கு முன்னேறியுள்ளார்.
டெஸ்ட்டில் அதிக ரன்கள் எடுத்த ஆஸ்திரேலிய வீரர்கள்
ரிக்கி பாண்டிங்: 13,378 ரன்கள்
ஆலன் பார்டர்: 11,174 ரன்கள்
ஸ்டீவ் ஸ்மித்: 10,929 ரன்கள்
ஸ்டீவ் வாக்: 10,927 ரன்கள்