இலங்கை அணி வெஸ்ட் இண்டீசில் பயணம் செய்து 3 ஒருநாள், 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
முதல் ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்ற இலங்கை அணி 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது. 2வது ஒருநாள் போட்டி மழையால் ரத்தானது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி ஜமைக்காவில் நேற்று நடைபெறுவதாக இருந்தது. மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது.
ஆனாலும் மழை தொடர்ந்து பெய்ததால் ஆட்டம் தடைபட்டது. சில மணி நேரங்களுக்கு மழை தொடர்ந்ததால் ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் தொடரை இலங்கை அணி 1-0 என கைப்பற்றியது.