சோனல் தினுஷாவின் பொறுப்பான ஆட்டத்தால் இந்தியா, இலங்கை இடையிலான 2வது டெஸ்ட் டிராவில் முடிந்தது.
இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் கொழும்புவில் நடந்தது.
இந்திய அணி முதல் இன்னிங்சில் 503 ரன்னுக்கு டிக்ளேர் செய்தது. அடுத்து ஆடிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் 290 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. பாலோ ஆன் பெற்ற இலங்கை அணி 2வது இன்னிங்சில் 6 விக்கெட் இழந்து தத்தளித்தது.
டிராவில் முடிந்த டெஸ்ட்
கடைசி நாளான இன்று இந்தியா வெற்றி பெற வாய்ப்பு இருந்த நிலையில், இலங்கை வீரர் சோனல் தினுஷா சதம் அடித்து இந்திய அணியின் வெற்றியை தடுத்தார். அவர் முதல் இன்னிங்சிலும் சதம் அடித்தார்.
இலங்கை அணி 429 ரன்களுக்கு டிக்ளேர் செய்ததால் 2வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.
29 ஆண்டுக்கு பின் சாதனை
இந்நிலையில், 29 ஆண்டுக்கு பின் சோனல் தினுஷா சாதனை படைத்துள்ளார். இந்தியாவிற்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் 2 இன்னிங்ஸ்களிலும் சதம் விளாசிய சோனல் தினுஷா, 1997-க்கு பின் இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியின் 2 இன்னிங்ஸிலும் சதமடித்த முதல் இலங்கை வீரராக சாதனை படைத்துள்ளார்.
ஆட்ட நாயகன்
இரு இன்னிங்சிலும் சதமடித்த சோனல் தினுஷாவுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
2வது டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் வெற்றியை தடுத்த சோனல் தினுஷா, கடைசி நாளில் இலங்கை அணியின் முக்கிய தூணாக நின்று கவனம் ஈர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.