அரை சதமடித்த ரோகித் சர்மா 
கிரிக்கெட்

ரோகித் சர்மா அசத்தல் - இலங்கை வெற்றி பெற 174 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா

டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் ஆடிய இந்தியா ரோகித் சர்மா அரை சதத்தால் 173 ரன்களை எடுத்தது.

மாலை மலர்

துபாய்:

ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. துபாயில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கிய போட்டியில் இந்தியா, இலங்கை அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, இந்திய அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா, கே.எல்.ராகுல் இறங்கினர். ராகுல் 6 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய விராட் கோலி டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். இதனால் இந்தியா 13 ரன்னுக்கு 2 விக்கெட்டை இழந்தது.

அடுத்து இறங்கிய சூர்யகுமார் யாதவ், ரோகித்துடன் ஜோடி சேர்ந்தார். முதலில் நிதானமாக ஆடிய ரோகித் சர்மா, அதிரடியில் இறங்கினார்.

சிக்சர், பவுண்டரிகளாக விளாசி அரை சதம் கடந்தார்.

3-வது விக்கெட்டுக்கு ரோகித் சர்மா, சூர்யகுமார் ஜோடி 97 ரன்களை சேர்த்த நிலையில், ரோகித் சர்மா 72 ரன்னில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து சூர்யகுமார் 34 ரன்னில் அவுட்டானார். பாண்ட்யா மற்றும் ரிஷப் பண்ட் 17 ரன்னிலும் ஹூடா 3 ரன்னிலும் வெளியேறினர்.

இறுதியில், இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 173 ரன்களை எடுத்தது. அஷ்வின் 13 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

இலங்கை சார்பில் மதுஷன்கா 3 விக்கெட்டும், டாசன் ஷனகா, கருணரத்னே ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து, 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்குகிறது.