கிரிக்கெட்

முத்தரப்பு தொடர்: பென் டக்கெட் அதிரடி சதம்-இலங்கைக்கு 387 ரன்களை இலக்கு நிர்ணயித்த இங்கிலாந்து

இங்கிலாந்தின் பென் டக்கெட் 167 ரன் குவித்து ஆட்டமிழந்தார்.

முத்தரப்பு ஒருநாள் தொடரில் இலங்கை அணி வெற்றிபெற 387 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இங்கிலாந்து.

பாகிஸ்தான், இலங்கை, இங்கிலாந்து அணிகள் பங்கேற்றுள்ள ஒருநாள் கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடந்து வருகிறது.

லாகூரில் இன்று நடந்த 6-வது லீக் போட்டியில் இலங்கை-இங்கிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற இலங்கை பவுலிங் தேர்வு செய்தது.

சதமடித்த பென் டக்கெட்

அதன்படி, முதலில் பேட் செய்த இங்கிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 386 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் பென் டக்கெட் அதிரடியாக ஆடி சதமடித்தார்.

முதல் விக்கெட்டுக்கு 163 ரன்கள் குவித்த நிலையில் டாம் பாண்டன் 74 ரன்னில் அவுட்டானார்.

பென் டக்கெட் 132 பந்துகளில் 167 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வீரர்களும் அதிரடியாக ஆடி ரன்களைக் குவித்தனர்.

கேப்டன் ஹாரி புரூக் 44 ரன்னும், வில் ஜாக்ஸ் 32 ரன்னும் எடுத்தனர்.

கடைசி கட்டத்தில் ஆடிய ஜோர்டான் காக்ஸ் 27 பந்தில் 43 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து, 111 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி விளையாடி வருகிறது.

பாகிஸ்தான் அணி ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT