கிரிக்கெட்

மெண்டிஸ், சமீரா அசத்தல்: முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது இலங்கை

டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பவுலிங் தேர்வு செய்தது.

இலங்கை அணி வெஸ்ட் இண்டீசில் பயணம் செய்து 3 ஒருநாள், 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி ஜமைக்காவில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பவுலிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 303 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் பதும் நிசங்கா அரை சதம் கடந்து 79 ரன்னில் அவுட்டானார். குசால் மெண்டிஸ் 72 ரன்னில் ஆட்டமிழந்தார். சரித் அசலங்கா 45 ரன் எடுத்தார். ஜெனித் லியாங்கே 29 பந்தில் 44 ரன்கள் குவித்தார்.

வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஜேடன் சீல்ஸ், மேத்யூ போர்டு, ரோஸ்டன் சேஸ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, 3034 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களமிறங்கியது. கேப்டன் ஷாய் ஹோப் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்து 56 ரன் சேர்த்தார். ஜஸ்டின் கிரீவ்ஸ் 45 ரன்னும், ரோஸ்டன் சேஸ் 33 ரன்னும் எடுத்தனர்.

இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 262 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இதன்மூலம் 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இலங்கை ஒருநாள் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

இலங்கை அணி சார்பில் துஷ்மந்தா சமீரா 4 விக்கெட்டும், மஹேஷ் தீக்சனா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். குசால் மெண்டிஸ் ஆட்ட நாயகன் விருது வென்றார்.