பாகிஸ்தானுக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இலங்கை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இலங்கை அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.
முதல் இரு டி20 போட்டிகளில் வென்ற பாகிஸ்தான் டி20 தொடரைக் 2-0 என கைப்பற்றியது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி ராவல்பிண்டியில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற இலங்கை அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய பாகிஸ்தான் 6 விக்கெட்டுக்கு 104 ரன்கள் எடுத்து திணறியது. கேப்டன் சாஹிப்சதா கான் அதிரடியாக ஆடி அரை சதம் கடந்தார். அவர் 76 ரன்னில் அவுட்டானார்.
அவருக்கு அராபத் மினாஸ் ஒத்துழைப்பு கொடுத்தார். அவர் 34 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இறுதியில், பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 168 ரன்கள் எடுத்தது.
இலங்கை அணி சார்பில் டாசுன் ஷனகா 3 விக்கெட்டும், நுவான் துஷாரா, இஷான் மலிங்கா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியில் கேப்டன் குசால் மெண்டிஸ் அதிரடியாக ஆடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.
குசால் மெண்டிஸ் 48 பந்தில் 87 ரன் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருக்கு கமிந்து மெண்டிஸ் நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். கமிந்து மெண்டிஸ் 40 ரன் குவித்தார்.
இறுதியில், இலங்கை அணி 17.1 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 172 ரன்கள் குவித்து அபார வெற்றி பெற்றது.
இதன்மூலம் பாகிஸ்தான் அணி டி20 தொடரில் 2-1 என கைப்பற்றியது.
ஆட்ட நாயகன் விருது குசால் மெண்டிசுக்கும், தொடர் நாயகன் விருது சாகிப்சதா பர்ஹானுக்கும் வழங்கப்பட்டது.