கிரிக்கெட்

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: இலங்கை அணி அறிவிப்பு

இலங்கை, இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் காலேயில் நாளை மறுதினம் தொடங்குகிறது.

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் விளையாடும் இலங்கை அணி அறிவிக்கப்பட்டது.

இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

இலங்கை, இந்தியா இடையிலான முதலாவது டெஸ்ட் காலேயில் நாளை மறுதினம் தொடங்குகிறது.

சமீபத்தில் நடந்த பயிற்சி ஆட்டத்தில் இலங்கை லெவன் அணியை இந்திய அணியினர் தோற்கடித்தனர்.

இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் விளையாடும் இலங்கை அணி அறிவிக்கப்பட்டது. கேப்டனாக ஆல் ரவுண்டர் தனஞ்செயா டி சில்வா உள்ளார்.

இலங்கை அணி விவரம்

தனஞ்செயா டி சில்வா (கேப்டன்), லஹிரு உதரா, நிஷான் மதுஷ்கா, கமிந்து மென்டிஸ், தினேஷ் சன்டிமால், பசிந்து சூரியபண்டாரா. சோனல் தினுஷா, நிரோஷன் டிக்வெல்லா, ரமேஷ் மென்டிஸ், பிரபாத் ஜெயசூர்யா, கேஷரா நுவாந்தா, மிலன் ரத்னாயகே, அசிதா பெர்னாண்டோ, லஹிரு குமாரா, விஷ்வா பெர்னாண்டோ, தில்ஷன் மதுஷனகா.

இந்த டெஸ்ட் தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்டது என்பதால் முக்கியத்துவம் பெறுகிறது.