கிரிக்கெட்

ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ்: இலங்கை வெற்றிபெற 318 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா ஏ

முதல் விக்கெட்டுக்கு சூர்யவன்ஷி-அபிஷேக் சர்மா ஜோடி 80 ரன் குவித்தது.

வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட்டின் அரையிறுதியில் இலங்கை ஏ அணி வெற்றிபெற 318 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா ஏ அணி.

வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) கத்தார் தலைநகர் தோகாவில் நடந்து வருகிறது.

இதில் பங்கேற்ற 8 அணிகள் இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் ஆப்கானிஸ்தான் 'ஏ', வங்கதேசம் 'ஏ'. இலங்கை 'ஏ'. ஹாங்காங் அணிகளும், 'பி' பிரிவில் இந்தியா 'ஏ', நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் 'ஏ', ஐக்கிய அரபு அமீரகம், நேபாளம் அணிகளும் இடம்பிடித்தன.

லீக் சுற்று முடிவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.

இந்நிலையில், இன்று நடந்து வரும் அரையிறுதி போட்டியில் இந்தியா 'ஏ' , இலங்கை ஏ அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற இந்தியா ஏ அணி பேட்டிங் தேர்வு செய்தது.

அபிஷேக் சர்மா அரைசதம்

அதன்படி, இந்தியா ஏ அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக வைபவ் சூர்யவன்ஷி, அபிஷேக் சர்மா இறங்கினர். இருவரும் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடினர்.

முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 80 ரன் சேர்த்த நிலையில் சூர்யவன்ஷி 40 ரன்னில் அவுட்டானார். அதிரடியைத் தொடர்ந்த அபிஷேக் சர்மா அரை சதம் கடந்தார்.

2வது விக்கெட்டுக்கு அபிஷேக் சர்மா-திலக் வர்மா ஜோடி 79 ரன் சேர்த்த நிலையில் அபிஷேக் சர்மா 78 ரன்னில் அவுட்டானார்.

அரை சதமடித்த திலக் வர்மா

பொறுப்புடன் ஆடிய திலக் வர்மா அரை சதம் கடந்து 53 ரன்னில் வெளியேறினார்.

கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய ஷாபாஸ் அகமது-தனுஷ் கோட்டியான் ஜோடி 73 ரன்களை சேர்த்தது.

இறுதியில், இந்தியா ஏ அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 317 ரன்கள் குவித்துள்ளது. ஷாபாஸ் அகமது 54 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

இதையடுத்து, 318 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்குகிறது.

SCROLL FOR NEXT