கிரிக்கெட்

IPL 2026 | ஐ.பி.எல்.-க்காக பாகிஸ்தான் சூப்பர் லீக்கை உதறிய இலங்கை அணி கேப்டன்

இலங்கை டி20 கிரிக்கெட் அணி கேப்டன் தசுன் ஷனாகா ஐபிஎல் போட்டியில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் சூப்பர் லீக் ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியுள்ளார்

மாலை மலர்

இலங்கை டி20 அணி கேப்டனாக இருப்பவர் தசுன் ஷனகா. இவர் பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். இந்த நிலையில் ஐபிஎல் போட்டியில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் விலக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சாம் கர்ரன் விலகல்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இங்கிலாந்தைச் சேர்ந்த சாம் கர்ரன் இடம் பிடித்திருந்தார். இவர் காயம் காரணமாக அந்த அணியில் இருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தசுன் ஷனகாவை ஒப்பந்தம் செய்ய முடிவு செய்துள்ளது.

ஐபிஎல் தொடர் நடைபெறும்போது, பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரும் நடைபெற உள்ளது. இதனால் ஐபிஎல் போட்டியில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் சூப்பர் லீக்கை உதறியுள்ளார்.

முசாரபானி

இதற்கு முன்னதாக ஜிம்பாப்வே அணி வேகப்பந்து வீச்சாளர் முசாரபானி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இணைவதற்காக பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் இருந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் 2026 சீசன் வருகிற 28-ந்தேதி தொடங்குகிறது.