கிரிக்கெட்

Womens T20 World Cup: சமாரி அடப்பட்டு தலைமையிலான இலங்கை அணி அறிவிப்பு

டி20 உலகக் கோப்பைக்காக இலங்கை அணி ஜூன் 3-ம் தேதி இங்கிலாந்து செல்கிறது.

10-வது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்து மற்றும் வேல்சில் ஜூன் 12-ம் தேதி முதல் ஜூலை 5-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

டி20 உலகக் கோப்பைக்காக இலங்கை அணி ஜூன் 3-ம் தேதி இங்கிலாந்து செல்கிறது. ஜூன் 12-ம் தேதி இங்கிலாந்துடனும், ஜூன் 16-ம் தேதி நியூசிலாந்துடனும், ஜூன் 21-ம் தேதி மேற்கிந்திய தீவுகளுடனும், ஜூன் 23-ம் தேதி அயர்லாந்துடனும், ஜூன் 26-ம் தேதி ஸ்காட்லாந்துடனும் மோத உள்ளது.

இந்நிலையில், இந்தப் போட்டிக்கான சமாரி அடப்பட்டு தலைமையிலான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அணியின் விவரம் வருமாறு:

சமாரி அடப்பட்டு (கேப்டன்), ஹாசினி பெரேரா, விஷ்மி குணரத்னே, ஹர்ஷிதா சமரவிக்ரமா, இமேஷா துலானி, நிலக்ஷிகா சில்வா, கவிஷா தில்ஹாரி, ஹன்சிமா கருணாரத்னே, கவுஷினி நுத்யாங்கனா, சுகந்திகா தசநாயக, நிமாஷா மதுஷானி, சஷினி கிம்ஹானி, காவ்யா கவிந்தி, மல்கி மதாரா, மித்தாலி அயோத்யா

சமாரி அடப்பட்டு இலங்கை மகளிர் அணிக்காக தனது 10-வது டி20 உலகக் கோப்பை தொடரில் ஆடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.