கிரிக்கெட்

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்: தனஞ்செயா டி சில்வா தலைமையில் இலங்கை அணி அறிவிப்பு

இலங்கை அணியின் கேப்டனாக தனஞ்செயா டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.ஓஷதா பெர்னாண்டோ மீண்டும் இலங்கை அணியில் இடம் பிடித்துள்ளார்.

நியூசிலாந்து அணி இலங்கை அணியில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி வருகிற 18-ந் தேதி தொடங்குகிறது.

இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடருக்கான 16 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தனஞ்செயா டி சில்வா தலைமையில் இந்த அணி களமிறங்குகிறது.

ஓஷதா பெர்னாண்டோ மீண்டும் இலங்கை அணியில் இடம் பிடித்துள்ளார். நிஷான் மதுஷ்காவுக்கு அணியில் வாய்ப்பு வழங்கபடவில்லை.

இலங்கை அணி விவரம்:-

தனஞ்சய டி சில்வா (கேப்டன்), திமுத் கருணாரத்னே, பதும் நிசங்கா, குசல் மெண்டிஸ், ஏஞ்சலோ மேத்யூஸ், தினேஷ் சண்டிமால், கமிந்து மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, ஓஷதா பெர்னாண்டோ, அசித்த பெர்னாண்டோ, விஷ்வ பெர்னாண்டோ, லஹிரு குமாரா, பிரபாத் ஜயசூரியா, ரமேஷ் மெண்டிஸ், ஜெப்ரி வான்டர்சே, மிலன் ரத்நாயக்க.