ஐ.பி.எல். 2027 சீசனுக்கான மினி ஏலம் டிசம்பர் 16-ந்தேதி கோவாவில் நடைபெற இருக்கிறது. இதற்கு முன்னதாக வருகிற 17-ந்தேதிக்குள் ஒவ்வொரு அணியும் தாங்கள் தக்கவைத்துக் கொண்டுள்ள வீரர்கள் பெயரை தெரிவிக்க வேண்டும் என்று ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதனால் சில அணிகள் வீரர்களை Trade செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பிடித்திருந்த ஹர்திக் பாண்ட்யா பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு டிரேடு செய்யப்பட்டிருந்தார். இதற்கு முன்னதாக ரிஷப் பண்ட், டி.நடராஜ் போன்ற வீரர்கள் டிரேடு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் இடம் பிடித்துள்ள ஹர்ஷல் படேலை குஜராத் டைட்டன்ஸ் அணி டிரேடு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் இதற்கு ஒப்புக் கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இறுதி முடிவு விரைவில் வெளியிடப்படலாம்.
2025 மெகா ஏலத்தில் 8 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்திருந்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத். தற்போது குஜராத் 4 கோடி ரூபாய்ப்பு டிரேடு செய்ய இருக்கிறது. இதனால் மினி ஏலத்தில் குஜராத் அணி 4 கோடி ரூபாயை இழக்க வேண்டியிருக்கும்.
ஹர்ஷல் படேல் 2012-ம் ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனார். ஆர்.சி.பி., டெல்லி கேப்பிட்டல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடியுள்ளார்.