துலீப் டிராபி இறுதிப்போட்டியின் மூன்றாவது நாளில் தெற்கு மண்டல அணி 6 விக்கெட்டுக்கு 242 ரன்கள் எடுத்துள்ளது.
துலீப் டிராபி இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கத்தில் கடந்த ஞாயிற்றுகிழமை தொடங்கியது. இதில் கிழக்கு மண்டலம், தெற்கு மண்டலம் அணிகள் மோதி வருகின்றன. டாஸ் வென்ற கிழக்கு மண்டலம் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த கிழக்கு மண்டலம் அணி முதல் இன்னிங்சில் 708 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது. கேப்டன் இஷான் கிஷன் பொறுப்புடன் ஆடி இரட்டை சதம் கடந்தார். அவர் 270 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
குமார் குஷாக்ரா சதமடித்து 101 ரன்னில் வெளியேறினார். ஷிகர் மோகன் 85 ரன்னும், அபிமன்யு ஈஸ்வரன் 75 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
தெற்கு மண்டல அணி சார்பில் திரிபுரன விஜய் 4 விக்கெட்டும், சமா மிலிந்த், ஷ்ரேயாஸ் கோபால் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, தெற்கு மண்டல அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. தேவ்தத் படிக்கல் சிறப்பாக ஆடி அரை சதம் கடந்தார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை. கேப்டன் திலக் வர்மா பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்து ஆடி வருகிறார்.
இறுதியில், மூன்றாம் நாள் முடிவில் தெற்கு மண்டல அணி 6 விக்கெட்டுக்கு 242 ரன்கள் எடுத்துள்ளது. திலக் வர்மா 56 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
தெற்கு மண்டல அணி இன்னும் 466 ரன்கள் பின்தங்கி யுள்ளது. இன்னும் 2 நாள் மீதமுள்ள நிலையில் கிழக்கு மண்டல அணியே வெற்றி பெறும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
கிழக்கு மண்டல அணி சார்பில் ஷமி, முகேஷ் குமார் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.