இந்திய மகளிர் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. முதல் டி20 போட்டி நாளை டர்பனில் நடைபெற உள்ளது.
இந்நிலையில், இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
டி20 உலகக் கோப்பைக்கு முன் அனைத்து வீரர்களுக்கும் போதுமான வாய்ப்புகளை வழங்க வேண்டும்.
இதற்காக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளப் போகிறோம்.
இதற்காக இந்திய அணி நம்பிக்கையுடனும் ஆர்வத்துடனும் இருக்கிறது.