ஆஸ்திரேலியா டெஸ்ட் கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. 2025-2027-ம் ஆண்டுகளுக்கான ஐ.சி.சி. உலக டெஸட் சாம்பியன்ஷிப்புக்கான தொடர் இதுவாகும். இறுதிப் போட்டிக்கு நுழைய இந்தத் தொடர் இரண்டு அணிகளுக்கும் முக்கியமானது.
இந்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டிக்கான தென்ஆப்பிரிக்கா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 18 பேர் இடம் பிடித்துள்ளனர். காயம் காரணமாக விளையாடாமல் இருந்த ரபடா மீண்டும் அணியில் இடம் பிடித்துள்ளார். எனினும், லுங்கி நிகிடி, மபாகா, பார்ட்மேன் அணியில் இடம் பெறவில்லை. காயத்தில் இருந்து மீண்டு வந்தாலும், டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கான rehabilitation தொடர்வதால் அவர்கள் இடம் பெறவில்லை.
அதேவேளையில் அன்ரிச் நோர்ஜே, ஜெரால்டு கோயட்சீ, டேன் பேட்டர்சன் ஆகியோர் அணிக்கு திரும்பியுள்ளனர்.
டெம்பா பவுமா (கேப்டன்), ஆக்கர்மேன், டேவிட் பெடிங்காம், கார்பின் போஸ்ச், ஜெரால்டு கோயட்சீ, டோனி டி ஜோர்சி, சைமன் ஹார்மர், மார்கோ யான்சன், கேஷவ் மகாராஜ், மார்க்கிராம், வியான் முல்டர், சீனுரான் முத்துசாமி, அன்ரிச் நோர்ஜே, டேன் பேட்டர்சன், காகிசோ ரபடா, ரியான் ரிக்கெல்டன், டிரிஸ்டியன் ஸ்டப்ஸ், கைல் வெரைன்.