வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்டில் வெற்றி பெற்றதன் மூலம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் நம்பர் ஒன் இடத்துக்கு முன்னேறியது தென் ஆப்பிரிக்கா.
வங்கதேச அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஜோகனஸ்பெர்கில் கேப் டவுனில் நடந்தது. இதில் தென் ஆப்பிரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை தோற்கடித்து, டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்டில் வெற்றி பெற்றதன் மூலம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் நம்பர் ஒன் இடத்துக்கு முன்னேறியது தென் ஆப்பிரிக்கா.
தென் ஆப்பிரிக்க அணி 2வது இடத்தில் இருந்து 75 சதவீத புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தது.
நியூசிலாந்து அணி ஒரு இடம் சரிந்து 72.22 சதவீத புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது.
ஆஸ்திரேலிய அணி 69.23 சதவீத புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது.
இந்திய அணி 11 போட்டிகளில் 5 வெற்றிகளுடன் 51.52 சதவீத புள்ளிகளைப் பெற்று 4-வது இடத்தில் உள்ளது.
வங்கதேச அணி 89 போட்டிகளில் 3 வெற்றியுடன் 40.74 சதவீத புள்ளிகளுடன் 5வது இடத்தில் உள்ளது.
இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, பாகிஸ்தான் ஆகிய அணிகள் 6 முதல் 9 வரையிலான இடத்தில் உள்ளன.