கிரிக்கெட்

ஐசிசி டெஸ்ட் தரவரிசை: முதலிடத்தைத் தட்டித் தூக்கிய தென் ஆப்பிரிக்கா

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்கா 2-1 என கைப்பற்றியது.

ஐசிசி வெளியிட்டுள்ள தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் இருந்த ஆஸ்திரேயாவை பின்னுக்குத் தள்ளி தென் ஆப்பிரிக்க அணி முதலிடம் பிடித்தது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 176 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதன்மூலம் டெஸ்ட் தொடரை 2-1 என கைப்பற்றியது.

இந்நிலையில், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கான அணிகள் தரவரிசை பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டது.

இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருந்த ஆஸ்திரேயாவை பின்னுக்குத் தள்ளி தென் ஆப்பிரிக்க அணி முதலிடம் பிடித்து அசத்தியது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என வென்றதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணி முதலிடத்துக்கு முன்னேறியது.

முதலிடத்தில் இருந்த ஆஸ்திரேலியா ஒரு இடம் சரிந்து 2வது இடத்தில் உள்ளது. நியூசிலாந்து அணி 3வது இடத்திலும், இந்திய அணி 4வது இடத்திலும், இங்கிலாந்து 5வது இடத்திலும் உள்ளது.

வங்கதேசம், இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், ஜிம்பாப்வே ஆகிய அணிகள் 6 முதல் 10வது இடங்களில் உள்ளன.

SCROLL FOR NEXT