தென்ஆப்பிரிக்கா- வங்கதேசம் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை ஜோகன்னஸ்பர்க்கில் தொடங்குகிறது.
தென்ஆப்பிரிக்கா தனது சொந்த மைதானத்தில் சமீபத்தில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. இதில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை தென்ஆப்பிரிக்கா 2-1 எனக் கைப்பற்றியது. அதேபோல் வங்கதேசம் தனது சொந்த மைதானத்தில் வெஸ்ட் இண்டீசை எதிர்கொண்டது. இரண்டு போட்டிகள் கொண்ட தொடரை வெஸ்ட் இண்டீஸ் 1-0 எனக் கைப்பற்றியது.
இந்த நிலையில் வங்கதேசம் அணி தென்ஆப்பிரிக்கா சென்று இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. முதல் டெஸ்ட் நாளை ஜோகன்னஸ்பர்க்கில் தொடங்க இருக்கிறது.
இந்த போட்டிக்கான ஆடும் லெவன் அணியை தென்ஆப்பிரிக்கா வெளியிட்டுள்ளது. வங்கதேச போட்டிக்கான தென்ஆப்பிரிக்கா ஆடும் லெவன் அணி:-
மார்கிராம், ஆக்கர்மேன், ஜுபெய்ர் ஹம்சா, டெம்பா பவுமா (கேப்டன்), மேத்யூ ப்ரீட்ஸ்கீ, ரியா ரிக்கெல்டன் (விக்கெட் கீப்பர்), வியான் முல்டர், மார்கோ யான்சன் ஹார்மர், ரபாடா, டேன் பேட்டர்சன்.