கிரிக்கெட்

ஜோகனஸ்பெர்க் டெஸ்ட்: ஆக்கர்மேன், ரிக்கல்டன் சதம்-தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 557 ரன் குவிப்பு

தென் ஆப்பிரிக்காவின் ஆக்கர்மேன், ரியான் ரிக்கல்டன் சதமடித்து அசத்தினர்.

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்டில் ஆக்கர்மேன், ரிக்கல்டன் ஆகியோரின் சதத்தால் தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 557 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

வங்கதேச அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடுகிறது.

இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பெர்கில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங் தேர்வு செய்தது.

ஹிருதோய், லிட்டன் தாஸ் சதம்

அதன்படி, முதலில் களமிறங்கிய வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 101.2 ஓவரில் 400 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தவ்ஹித் ஹிருதோய்-லிட்டன் தாஸ் ஜோடி பொறுப்புடன் ஆடி சரிவை நோக்கிச் சென்ற அணியை போராடி மீட்டது.

6-வது விக்கெட்டுக்கு 206 ரன்கள் சேர்த்த நிலையில் தவ்ஹித் ஹிருதோய் 137 ரன்னில் வெளியேறினார். லிட்டன் தாஸ் சதமடித்து 120 ரன்னில் ஆட்டமிழந்தார்.

தென் ஆப்பிரிக்க அணி சார்பில் ரபாடா 5 விக்கெட்டும், டேன் பீட்டர்சன் 4 விக்கெட்டும், மார்கோ யான்சென் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் எய்டன் மார்கிரம் 4 ரன்னில் அவுட்டானார்.

ஆக்கர்மேன் உடன் ஜுபைர் ஹம்சா இணைந்து நிதானமாக ஆடினார். ஹம்சா அரை சதமடித்தார்.

சதமடித்த ஆக்கர்மேன்

2வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 202 ரன்கள் சேர்த்த நிலையில், ஜுபைர் ஹம்சா 83 ரன்னில் ஆட்டமிழந்தார். சிறப்பாக ஆடிய ஆக்கர்மேன் 157 ரன்கள் எடுத்து வெளியேறினார். டெம்பா பவுமா 49 ரன்னில் ரிடயர் ஹர்ட் முறையில் வெளியேறினார்.

மூன்றாம் நாள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட்டுக்கு 386 ரன்கள் எடுத்தபோது மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. ரிக்கல்டன் 56 ரன்னும், ரபாடா 5 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

ரிக்கல்டன் சதம்

இந்நிலையில், நான்காம் நாள் ஆட்டம் இன்று நடந்தது. சிறப்பாக ஆடிய ரிக்கல்டன் சதமடித்து அசத்தினார். ரபாடா அரை சதம் கடந்து 72 ரன்னில் அவுட்டானார்.

8-வது விக்கெட்டுக்கு ரிக்கல்டன்-ரபாடா ஜோடி இணைந்து 117 ரன்கள் சேர்த்தது.

இறுதியில், தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 557 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. டெம்பா பவுமா அரை சதம் கடந்து 68 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

வங்கதேசம் சார்பில் ஹசன் மஹ்முத் 4 விக்கெட்டும், தஸ்கின் அகமது, மெஹிதி ஹசன் தலா 2 விக்கெட்டும், எப்டாட் ஹொசைன், மொமினுல் ஹக் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

157 ரன்கள் பின்தங்கிய நிலையில், வங்கதேசம் அணி 2வது இன்னிங்சை விளையாடி வருகிறது.

SCROLL FOR NEXT