கிரிக்கெட்

ஆக்கர்மேன், வியான் முல்டர் சதம்: 2-ம் நாள் முடிவில் தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 494 ரன் குவித்து டிக்ளேர்

தென் ஆப்பிரிக்காவின் ஆக்கர்மேன், வியான் முல்டர் ஆகியோர் சதமடித்து அசத்தினர்.

வங்கதேசத்துக்கு எதிரான 2வது டெஸ்டில் இரண்டாம் நாள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட்டுக்கு 494 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

தென் ஆப்பிரிக்கா, வங்கதேச அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி செஞ்சூரியனில் நடந்து வருகிறது. மழை காரணமாக மதிய உணவு இடைவேளைக்குப் பிறகே போட்டிஆட்டம் தாமதமானது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

வங்கதேசம் 91 ரன்னுக்கு ஆல் அவுட்

அதன்படி, முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 33.3 ஓவரில் 91 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக மஹிஜுல் இஸ்லாம் 23 ரன்கள் எடுத்தார்.

யான்சென், ரபாடா அசத்தல்

தென் ஆப்பிரிக்கா சார்பில் மார்கோ யான்சென், ககிசோ ரபாடா தலா 3 விக்கெட்டும், ஆன்ரிச் நூர்ஜே 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 2ம் நாள் முடிவில் முதல் இன்னிங்சில் ஒரு விக்கெட் இழப்புக்கு 88 ரன்கள் எடுத்திருந்தது.

ஆக்கர்மேன் 46 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ஆக்கர்மேன் அசத்தல் சதம்

இந்நிலையில், 2ம் நாள் ஆட்டம் நேற்று நடந்தது. சிறப்பாக ஆடிய ஆக்கர்மேன் சதமடித்து 150 ரன்னில் வெளியேறினார். 2-வது விக்கெட்டுக்கு ஆக்கர்மேன்-ஜுபைர் ஹம்சா ஜோடி 96 ரன்கள் சேர்த்தது.

டோனி டி ஜோர்சி அரை சதம் கடந்து 66 ரன்னில் அவுட்டானார்.

வியான் முல்டர் சதம்

அடுத்து இறங்கிய வியான் முல்டர் பொறுப்புடன் ஆடி சதமடித்து ஆட்டமிழந்தார்.

கடைசி கட்டத்தில் இறங்கிய மார்கோ யான்சென் அரை சதம் கடந்து 67 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

இறுதியில், தென் ஆப்பிரிக்க அணி 115 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 494 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

வங்கதேசம் சார்பில் ஷோரிபுல் இஸ்லாம், காலித் அகமது தலா 2 விக்கெட் வீழ்த்தினர். வங்கதேசம் அணி 403 ரன்கள் பின்தங்கியுள்ளது.

SCROLL FOR NEXT