ஐசிசி வெளியிட்டுள்ள டி20 தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் வைபவ் சூர்யவன்ஷி அசுர வேகத்தில் முன்னேறி டாப் 50 பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.
டி20 பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் சூர்யவன்ஷி 230 இடங்கள் முன்னேறி 48வது இடம் பிடித்துள்ளார்.
சமீபத்தில் நடந்த ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரில் சூர்யவன்ஷி அதிரடியாக ஆடியதே இந்த முன்னேற்றத்துக்கு காரணம் ஆகும்.
முதலிடத்தில் இந்தியாவின் இஷான் கிஷனும், மூன்றாவது இடத்தில் அபிஷேக் சர்மாவும், ஆறாவது இடத்தில் திலக் வர்மாவும் உள்ளனர்.
இதேபோல், ஒருநாள் கிரிக்கெட்டுக்கான பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்தியாவின் சுப்மன் கில் மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.
நியூசிலாந்தின் டேரில் மிட்செல் இரண்டாவது இடத்தை தக்கவைத்துள்ளார்.
விராட் கோலி (3-வது இடம்), ரோகித் சர்மா (4-வது இடம்) ஆகியோர் அதே இடங்களில் நீடிக்கின்றனர். ஆப்கானிஸ்தானின் இப்ராகிம் சட்ரன் 5வது இடத்தில் உள்ளார்.