இலங்கை, இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் முத்தரப்பு ஏ ஒருநாள் தொடர் இலங்கையில் நடந்து வருகிறது.
லீக் போட்டிகளின் முடிவில் இந்தியா, இலங்கை அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.
இந்நிலையில், இலங்கையில் நடைபெறும் இறுதிப் போட்டியில் இலங்கை, இந்தியா அணிகள் மோதின. தம்புல்லாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, இந்திய அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் வைபவ் சூர்யவன்ஷி அதிரடியாக ஆடினார். அவர் 11 பந்துகளில் 5 சிக்சர், 5 பவுண்டரி விளாசி அரை சதம் கடந்து அசத்தினார்.
முதல் தர கிரிக்கெட் போட்டியில் சூர்யவன்ஷி 11 பந்தில் அரை சதம் கடந்து சாதனை படைத்துள்ளார்.