கிரிக்கெட்

வைபவ் சூர்யவன்ஷி டெஸ்ட் போட்டிகளில் விளையாடினால் அது மேலும் பிரபலமடையும்: அலெஸ்டர் குக்

ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் கிரிக்கெட் தொடரில் வைபவ் சூர்யவன்ஷி 52 பந்தில் 204 ரன் எடுத்தார்.

இந்திய அணியின் வைபவ் சூர்யவன்ஷி டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட வேண்டும் என நினைக்கிறேன். அது டெஸ்ட் கிரிக்கெட்டை மேலும் பிரபலப்படுத்தும் என இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் இளம் வீரரும், அதிரடி ஆட்டக்காரருமாக விளங்குபவர் வைபவ் சூர்யவன்ஷி. இவர் ஐபிஎல் தொடர் மற்றும் தேசிய அணியில் இடம்பெற்று அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

சமீபத்தில் ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் கிரிக்கெட் தொடரில் 52 பந்தில் 204 ரன் எடுத்து, அதிவேக இரட்டைச் சதம் விளாசியவர் என்ற சாதனை படைத்தார்.

இந்நிலையில், வைபவ் சூர்யவன்ஷியைப் போன்ற திறமைசாலியை இதற்குமுன் ஒருபோதும் பார்த்ததில்லை என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் அலெஸ்டர் குக் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அலெஸ்டர் குக் கூறியதாவது:

வைபவ் சூர்யவன்ஷி விளையாடியதைப் போல் இதற்குமுன் வேறு யாரும் விளையாடி நான் பார்த்ததில்லை.

அவர் தொடர்ச்சியாக அதிரடியாக விளையாடுவது நம்பமுடியாத விதத்தில் உள்ளது.

டி20 கிரிக்கெட்டில் அவர் ஒரு புயலாக உருவாகியுள்ளார். ஐபிஎல் தொடரில் அவரது சாதனை நம்பமுடியாத விதத்தில் உள்ளது.

ஒவ்வொரு தலைமுறையும் வீரர் ஒருவரைப் பார்த்து ஊக்கமடைவார்கள்.

அனைத்து வடிவிலான போட்டிகளிலும் அடுத்த தலைமுறைக்கு ஊக்கமளிப்பவராக வைபவ் சூர்யவன்ஷி இருப்பார்.

வைபவ் சூர்யவன்ஷி டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட வேண்டும் என நினைக்கிறேன். அது டெஸ்ட் கிரிக்கெட்டை மேலும் பிரபலப்படுத்தும்.

அவரைப் போன்ற திறமைசாலி ஒருவரை இதற்குமுன் ஒருபோதும் பார்த்ததில்லை.

வெள்ளைப் பந்து போட்டிகளைப் போல், அவர் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் சிறப்பாக விளையாடுவாரென நம்புகிறேன் என தெரிவித்தார்.

SCROLL FOR NEXT