கிரிக்கெட்

2024-ம் ஆண்டின் சிறந்த மகளிர் ஒருநாள் வீராங்கனையாக ஸ்மிருதி மந்தனா தேர்வு

கடந்த ஆண்டில் மந்தனா, 13 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 747 ரன்கள் குவித்துள்ளார்.மந்தனா 2018-ம் ஆண்டுக்கு பிறகு கடந்த ஆண்டுக்கான ஐசிசி விருதை வென்றுள்ளார்.

மாலை மலர்

துபாய்:

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஆண்டுதோறும் சிறந்த டெஸ்ட், ஒருநாள், டி20 அணிகள் மற்றும் சிறந்த வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது.

அந்த வகையில் கடந்த ஆண்டின் (2024) சிறந்த மகளிர் ஒருநாள் வீராங்கனையாக இந்திய அணியின் ஸ்மிருதி மந்தனாவை ஐ.சி.சி. அறிவித்துள்ளது. அவர் கடந்த ஆண்டில் இந்தியாவுக்காக 13 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 747 ரன்கள் குவித்துள்ளார். இதில் 4 சதங்களும் மூன்று அரைசதங்களும் அடங்கும். மேலும் பந்து வீச்சில் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார்.

மந்தனா 2018-ம் ஆண்டுக்கு பிறகு ஐசிசி விருது வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐசிசி மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வீரருக்கான விருது வென்றவர்கள்

ஸ்டாஃபானி டெய்லர் (வெஸ்ட் இண்டீஸ்) - 2012

சுசி பேட்ஸ் (நியூசிலாந்து) - 2013

சாரா டெய்லர் (இங்கிலாந்து) - 2014

மெக் லானிங் (ஆஸ்திரேலியா) - 2015

சுசி பேட்ஸ் (நியூசிலாந்து) - 2016

ஏமி சாட்டர்த்வைட் (நியூசிலாந்து) - 2017

ஸ்மிருதி மந்தனா (இந்தியா) - 2018

எல்லிஸ் பெர்ரி (ஆஸ்திரேலியா) - 2019

லிசெல் லீ (தென்னாப்பிரிக்கா) - 2021

நாட் ஸ்கிவர்-ப்ரண்ட் (இங்கிலாந்து) - 2022

சாமரி அதபத்து (இலங்கை) - 2023

ஸ்மிருதி மந்தனா (இந்தியா) - 2024