ஸ்மிருதி மந்தனா 
கிரிக்கெட்

இந்திய மகளிர் அணி கேப்டனாக ஸ்மிருதி மந்தனா அறிவிப்பு.. கேப்டனாக ஜிம்பாப்வேவுக்கு எதிராக முதல் ஆட்டம்

ஸ்மிருதி மந்தனா கேப்டனாக தனது முதல் தொடரை ஜிம்பாப்வேவுக்கு எதிராக தொடங்குகிறார்.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக ஸ்மிருதி மந்தனா நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ஹர்மன்பிரீத் கௌர் அவரது கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக நேற்று (செய்வாய்க்கிழமை) அறிவித்தார்.

பிசிசிஐ நடத்திய முக்கிய ஆய்வுக்கூட்டத்திற்குப் பிறகு, நேற்று காலை தனது சமூக வலைதளப் பக்கத்தின் வாயிலாக இந்த முடிவை அவர் அறிவித்தார்.

அனைத்து வடிவிலான போட்டிகளுக்குமான கேப்டன் பொறுப்பிலிருந்தும் விலகிய அவர், இந்திய அணியில் கேப்டனாக தனது கடமை முடிந்துவிட்டதாகவும் தெரிவித்தார்.

ஹர்மன்பிரீத் கௌர் பதிவு

தனது கேப்டன் பதவி விலகல் குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ஹர்மன்பிரீத் கவுர், "அனைத்து வடிவ போட்டிகளுக்கான இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து நான் இன்று விலகுகிறேன்.

இது எனக்கு எளிதான முடிவல்ல; பல ஆண்டுகால நினைவுகள், உணர்ச்சிகள், தியாகங்கள் மற்றும் வாழ்நாள் முழுவதும் என்னோடு பயணிக்கப்போகும் கணங்களைச் சுமந்து இந்த முடிவை எடுத்துள்ளேன்" என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், ஒரு கிரிக்கெட் வீரராக இந்திய அணிக்குத் தொடர்ந்து எனது முழுப் பங்களிப்பையும் வழங்குவேன் என்றும், அடுத்தகட்ட தலைமுறைக்கு வழிவிடும் நோக்கில் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்த .

அடுத்த கேப்டன்

இந்த நிலையில், இந்திய அணியின் புதிய கேப்டனாக ஸ்மிருதி மந்தனா நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய அணியின் புதிய கேப்டனாக ஸ்மிருதி மந்தனாவை நியமித்த பிசிசிஐ, ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களுக்கான இந்திய அணியையும் அறிவித்துள்ளது.

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடர் வருகிற அக்டோபர் 16 ஆம் தேதியும், ஒருநாள் தொடர் அக்டோபர் 23 ஆம் தேதியும் தொடங்குகிறது.

இதன்படி ஸ்மிருதி மந்தனா கேப்டனாக தனது முதல் தொடரை ஜிம்பாப்வேவுக்கு எதிராக தொடங்குகிறார்.

டி20 தொடருக்கான இந்திய அணி

ஸ்மிருதி மந்தனா (கேப்டன்), ஷஃபாலி வர்மா (துணைக் கேப்டன்), நிகி பிரசாத், ஹர்மன்பிரீத் கௌர், அனுஷ்கா சர்மா, ரிச்சா கோஷ், ஜி. கமலினி, தீப்தி சர்மா, பிரேமா ரௌத், ஸ்ரீ சரணி, நந்தினி சர்மா, கிராந்தி கௌட், அருந்ததி ரெட்டி, ஜிந்திமணி கலிதா, மின்னு மணி.

ஒருநாள் தொடருக்கான இந்திய அணி

ஸ்மிருதி மந்தனா (கேப்டன்), ஷஃபாலி வர்மா, பிரதீகா ராவல், ஹர்மன்பிரீத் கௌர், வைஷ்ணவி சர்மா, ஹர்லீன் தியோல், தீப்தி சர்மா, ரிச்சா கோஷ், யாஷ்திகா பாட்டியா, தேஜல் ஹஜப்னிஸ், நந்தினி சர்மா, ஸ்ரீ சரணி, கிராந்தி கௌட், சயாலி சத்கரே, ரேணுகா தாக்கூர்.

SCROLL FOR NEXT