இந்தியாவின் அதிரடி பேட்ஸ்மேனாக திகழ்பவர் ரோகித் சர்மா. இதுவரை ரசிகர்கள் செல்லமாக ஹிட்மேன் என அழைப்பார்கள். இதற்கு காரணம் பந்துகளை அடிக்கடி சிக்சர்களுக்கு பறக்க விடுவார். ஒருநாள் கிரிக்கெட்டில் மூன்று முறை இரட்டை சதம் விளாசியுள்ளார். இலங்கைக்கு எதிரகா 264 ரன்கள் குவித்தது, ஒருநாள் கிரிக்கெட்டில் தனிநபரின் சாதனையாக விளங்கி வருகிறது.
உலகின் பல்வேறு இடங்களில் விளையாடி அதிரடியால் மிரட்டிய ரோகித் சர்மாவால், நியூசிலாந்து மண்ணில் மட்டும் மிகப்பெரிய அளவில் சாதிக்க முடியாமல் இருக்கிறது.
இதுவரை 14 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் இரண்டு அரைசதங்கள் மட்டுமே அடங்கும். சதம் அடிக்கவில்லை. சராசரி 36.41. ஸ்டிரைட் ரேட் 72.95 ஆகும். இன்னும் 4 போட்டிகள் மீதமுள்ளன. அதில் சாதிப்பாரா? என்று பார்ப்போம்.
ரோகித் சர்மா 292 ஒருநாள் போட்டிகளில் 35 சதம், 63 அரைசதங்களுடன் 12120 ரன்கள் குவித்துள்ளார். சராசரி 49.06 ஆகும். 1148 பவுண்டரிகள், 381 சிக்சர்கள் விளாசியுள்ளார்.