கிரிக்கெட்

அயர்லாந்து, இங்கிலாந்து டி20 தொடர்: முக்கிய பவுலருக்கு ஓய்வு அளித்த பிசிசிஐ

இந்திய அணி டி20 தொடரில் விளையாடுவதற்காக வரும் 26-ம் தேதி அயர்லாந்து செல்கிறது.

இந்திய கிரிக்கெட் அணி இந்த மாத இறுதியில் அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக வரும் 26-ம் தேதி அயர்லாந்து செல்கிறது.

அதனைத் தொடர்ந்து, 5 டி20 கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக அடுத்த மாதம் இங்கிலாந்து செல்கிறது. மேலும், 3 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடுகிறது. டி20 கிரிக்கெட் தொடர் ஜூலை 1-ம் தேதி தொடங்குகிறது.

அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து செல்லும் இந்திய டி20 அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. அதன்படி, ஷ்ரேயாஸ் அய்யர் கேப்டனாகவும், திலக் வர்மா துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில், அயர்லாந்து, இங்கிலாந்து செல்லும் இந்திய அணியில் இருந்து முகமது சிராஜுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது என இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. அவருக்கு பதிலாக பிரசித் கிருஷ்ணா இந்திய அணியில் இணைவார் எனவும் தெரிவித்துள்ளது.

பிசிசிஐ மருத்துவக் குழுவிற்கும் அணி நிர்வாகத்திற்கும் இடையே நடந்த கலந்துரையாடலைத் தொடர்ந்து, சிராஜுக்கு ஓய்வு அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. வரவிருக்கும் நீண்ட சர்வதேசப் போட்டித் தொடருக்கு முன், அவர் போதுமான அளவு குணமடைவதை உறுதி செய்வதற்கான ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என பிசிசிஐ தெரிவித்தது.