ரோகித் சர்மா, விராட் கோலி- சுப்மன் கில்
கிரிக்கெட்

அருமையாக விளையாடுகிறார்கள்: ரோகித் சர்மா, விராட் கோலி குறித்த விமர்சனங்களுக்கு சுப்மன் கில் பதில்..!

வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி சதம் அடித்தனர்.

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான தொடரில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் சதம் விளாசினர். கடைசி போட்டியில் ரோகித் சர்மா 92 ரன்கள் அடித்து சதத்தை தவறவிட்டார். விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவுக்கு ஓய்வு கொடுத்து இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா? 50 ஓவர் உலக கோப்பைக்கான இந்திய அணியில் இருவருக்கும் இடம் கிடைக்குமா? என்ற கேள்விகள் எல்லாம் எழுந்து வருகிறது. இதற்கு காரணம் விராட் கோலிக்கு 37 வயதாகிறது. ரோகித் சர்மாவுக்கு 39 வயதாகிறது.

ரோகித் சர்மா, விராட் கோலி சிறப்பாக பேட்டிங் செய்கிறார்கள்

ஆனால், இருவரும் அருமையாக விளையாடுகிறார்கள் என்று சுப்மன் கில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சுப்மன் கில் கூறியதாவது:-

அவர்கள் (விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா) மிகச் சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறார்கள். ரோகித் சர்மா கடந்த நான்கு இன்னிங்ஸ்களில் மூன்று சதங்களை அடித்துள்ளார் என்று நினைக்கிறேன். அவரும் விராட் கோலியும் மிகச் சிறப்பாக விளையாடி வருகின்றனர். அதேபோல கே.எல். ராகுலுக்கும் (KL) வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அவர் அணிக்கான தனது பங்கைச் சிறப்பாக ஆற்றியுள்ளார். அவர் (கே.எல். ராகுல் கடைசி போட்டியில் சதம் அடித்தார்) முழு முயற்சியுடன் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்துள்ளார்.

பரிசோதனைக்கு நேரம் இல்லை

உண்மையைச் சொல்லப்போனால், பரிசோதனை முயற்சிகளில் ஈடுபடுவதற்கு அதிக நேரம் இல்லை என்றே நான் கருதுகிறேன். அடுத்த தொடரிலிருந்தே அனைத்து வீரர்களும் விளையாடும் நிலைமையில் இருப்பார்கள் என்று நம்புகிறேன். உலகக் கோப்பையில் நாம் எந்தக் கூட்டணி அல்லது வீரர்களின் கலவையுடன் (combination) விளையாட விரும்புகிறோமோ, அதையே இப்போதிருந்தே பயன்படுத்தத் தொடங்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

இவ்வாறு சுப்மன் கில் தெரிவித்துள்ளார்.

இதனால் விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் உலக கோப்பையில் இடம் பெற வேண்டும் பிசிசிஐ விரும்பினால், இருவரும் தொடர்ந்து அணியில் இடம் பிடிப்பார்கள்.

SCROLL FOR NEXT