ஷ்ரேயாஸ் அய்யர் 
கிரிக்கெட்

IPL 2026 | காயத்தால் 7 கிலோ எடையை இழந்தேன்: ஷ்ரேயாஸ் அய்யர்

காயத்தின்போது 7 கிலோ எடையை இழந்தேன். அந்த எடையை மீண்டும் பெற கடுமையான முயற்சி தேவைப்பட்டது என ஷ்ரேயாஸ் அய்யர் தெரிவித்துள்ளார்

மாலை மலர்

இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேனான ஷ்ரேயாஸ் அய்யர், ஆஸ்திரேலியாவில் விளையாடும்போது பந்தை கேட்ச் பிடிக்க முயன்றபோது, விலா எழும்பில் பலத்த காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக சுமார் 3 மாதத்திற்கு மேலாக விளையாடாமல் உள்ளார்.

வருகின்ற 28-ந்தேதி தொடங்கும் ஐ.பி.எல். தொடரில் களம் இறங்க உள்ளார். இந்த நிலையில் காயத்தின்போது 7 கிலோ எடை குறைந்தது என்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஷ்ரேயாஸ் அய்யர் கூறியதாவது:-

ஒரு காயத்திலிருந்து மீண்டு வந்து மீண்டும் களமிறங்குவது எப்போதும் ஒரு சவாலான விஷயமாகும். மிகவும் தீவிரமானதாக அமைந்த அந்தக் காயத்தின் காரணமாக, நான் சுமார் 7 கிலோ எடையை இழந்திருந்தேன்.

நல்ல வேளையாக, இரண்டு மாதங்களுக்குப் பிறகு நான் மீண்டும் நல்ல உடல் தகுதியைப் பெற்றேன். ஆனால், இழந்த அந்த 7 கிலோ எடையை மீண்டும் கூட்டுவதற்கு எனக்குப் பெரும் முயற்சி தேவைப்பட்டது. நான் சவால்களை விரும்பி ஏற்பவன். அதுவும் நான் வெற்றிகரமாகக் கடந்து வர வேண்டிய ஒரு சவாலாக அமைந்தது.

இவ்வாறு ஷ்ரேயாஸ் அய்யர் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக ஷ்ரேயாஸ் அய்யர் உள்ளார். கடந்த முறை இவரது தலைமையில் பஞ்சாப் கிங்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறி, ஆர்சிபி-யிடம் தோல்வியடைந்தது.