ஸ்ரீ சரணி
கிரிக்கெட்

ஐ.சி.சி. தரவரிசை பட்டியலில் இதுவரையிலான சாதனையை முறியடித்த இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்ரீ சரணி

817 ரேட்டிங் புள்ளிகள் பெற்று சாதனைப் படைத்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ICC) வீராங்கனைகளுக்கான பந்து வீச்சு தரவரிசையில் இந்திய வீராங்கனை ஸ்ரீ சரணி நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளார். தரவரிசைக்கான ரேட்டிங் புள்ளிகளில் இதுவரை இல்லாத அளவிற்கு 817 புள்ளிகள் பெற்று அசுர சாதனைப் படைத்துள்ளார்.

ஸ்ரீ சரணி இரண்டு தொடர்களில் 20 விக்கெட்

இவர் ஆசிய போட்டியில் சாம்பியன் மற்றும் ஆசிய விளையாட்டில் தங்கம் வென்ற இந்திய பெண்கள் அணியில் அபாரமாக பந்து வீசினார். 6 போட்டிகளில் 20 விக்கெட்டுகள் சாய்த்தார். இரண்டு முறை 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். ஜப்பானுக்கு எதிராக 10 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகள் சாய்த்தார்.

இதற்கு முன்னதாக ஆஸ்திரேலியா வீராங்கனை மேகன் ஸ்கட் 806 புள்ளிகள் பெற்றிருந்ததே ரேட்டிங் புள்ளிகளில் அதிகபட்ச புள்ளிகளாக இருந்தது. இதை தற்போது ஸ்ரீ சரணி 817 புள்ளிகளுடன் முறியடித்துள்ளார்.

தீப்தி சர்மா

இந்தியாவின் ஆல்ரவுண்டர் தீப்தி சர்மா 2-வது இடத்தை பிடித்துள்ளார். இங்கிலாந்து வீராங்கனை ஷோபி எக்லெஸ்டோன் 3-வது இடத்தை பிடித்துள்ளார்.

SCROLL FOR NEXT