கிரிக்கெட்

T20 WorldCup வென்ற கையோடு மனைவியுடன் ரெயிலில் ரகசியமாக பயணம் மேற்கொண்ட சிவம் துபே

அகமதாபாத்தில் இருந்து மும்பைக்கு சிவம் துபே ரெயிலில் பயணம் மேற்கொண்டுள்ளார்விரைவு ரெயிலின் 3 AC பெட்டியில் துபேவும் அவரது மனைவியும் பயணித்துள்ளனர்.

மாலை மலர்

டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு வாழ்த்து மழை தொடர்கிறது. கோப்பை வென்ற இந்திய வீரர்கள் சொந்த ஊர்களுக்கும் திரும்பும் நிலையில் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது. இந்த வரிசையில், இந்திய வீரர் சிவம் துபே மகாராஷ்டிரா மாநிலத்துக்கு திரும்பியுள்ளார்.

இந்நிலையில், அகமதாபாத்தில் இருந்து மும்பைக்கு சிவம் துபே ரெயிலில் பயணம் மேற்கொண்டுள்ளார் என்ற சுவாரசிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

டி20 உலக கோப்பை இறுதிப்போட்டி முடிந்து அகமதாபாதில் இருந்து மும்பைக்கு விமானத்தில் டிக்கெட் கிடைக்காததால் விரைவு ரெயிலின் 3 AC பெட்டியில் துபேவும் அவரது மனைவியும் பயணித்துள்ளனர்.

இதுகுறித்து பேசிய சிவம் துபே, "நான் முகக்கவசம், தொப்பி அணிந்து UPPER படுக்கையில் பதுங்கினேன். டிக்கெட்டில் சிவம் துபே என்ற பெயரைப் பார்த்து 'கிரிக்கெட் வீரரா?' என TTE கேட்கவே, "அவர் ஏன் இங்கு வரப் போகிறார்" எனக் கூறி எனது மனைவி சமாளித்தார்" என்று தெரிவித்தார்.