ஷாய் ஹோப்
கிரிக்கெட்

இந்தியாவுக்கு எதிராக 162 ரன்கள் விளாசி பல்வேறு சாதனைகள் படைத்த வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஷாய் ஹோப்

சேஸிங்சில் வெஸ்ட் இண்டீஸ் வீரரின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.

இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா முதலில் பேட்டிங் செய்து 351 ரன்கள் குவித்தது. ஆனால், வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஷாய் ஹோப் 143 பந்துகளில் 162 ரன்கள் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருக்க வெஸ்ட் இண்டீஸ் 48.2 ஓவரில் இலக்கை எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

கெய்ல் சாதனை முறியடிப்பு

இந்தியாவுக்கு எதிராக ஷாய் ஹோப் ஆட்டமிழக்காமல் 162 ரன்கள் குவித்ததன் மூலம் பல்வேறு சாதனைகளை படைத்தார்.

ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீசை சேர்ந்த கெய்ல் சேஸிங்கில் அதிகபட்சமாக 162 ரன்கள் எடுத்திருந்தார. அதை தற்போது ஷாய் ஹோப் முறியடித்துள்ளார்.

இந்தியாவுக்கு எதிராக சேஸிங்கில் 150 ரன்களுக்கு மேல் அடித்த வீரர் இவர் ஆவார். இதற்கு முன்னதாக தில்சன் (160), அண்ட்ரூ ஸ்டாரஸ் (158) ஜெயசூர்யா (151 நாட்அவுட்) இந்த சாதனைகளை படைத்துள்ளனர்.

விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக ஒருநாள் போட்டியில் 8 சதங்கள் அடித்துள்ளார். இதன்மூலம் டோனி (6), டி. வில்லியர்ஸ் (4) ஆகியோரை விட மிகவும் முன்னணியாக உள்ளார்.

விரைவாக 21 சதம் விளாசிய சாதனைப் பட்டியலில் இணைந்தார்

152 போட்டிகளில் 21 சதம் அடித்துள்ளார். இதன்மூலம் குறைவான இன்னிங்சில் 21 சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் 3-வது இடத்தி9ல் உள்ளார். இதற்கு முன்னதாக டி காக், டேவிட் வார்னர் இந்த சாதனையை படைத்திருந்தனர். அம்லா 116 இன்னிங்சிலும், விராட் கோலி 138 இன்னிங்சிலும் 21 சதங்களை எட்டினர். இவரது சதத்தால் வெஸ்ட் இண்டீஸ் 352 என்ற மிகப்பெரிய ஸ்கோரை சேஸிங் செய்துள்ளது.

SCROLL FOR NEXT